| தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம்பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
உளி எடுத்துச் சிற்பம் செதுக்கியவன், மூங்கில் அறுத்துப் புல்லாங்குழல் செய்தவன், ஒலை கிழித்துக் கவிதை எழுதியவன்.. இவர்களுக்கும் பங்குண்டு மழைக் கொலையில். ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு கொடிக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் பெயர்ச்சொல்லி, உறவு சொல்லி வாழ்ந்த வாழ்க்கை வற்றிவிட்டது*****அறிவுமதி
|
|
***
மனதில் உறுதி வேண்டும்வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்வானகம் இங்கு தென் படவேண்டும்****பாரதி
**மறுபக்கம் **